“ஒன்றாக இணைவோம் – சுத்தமான இலங்கையை கட்டியெழுப்புவோம்” என்ற தொனிப்பொருளின் கீழ், நாட்டின் அனைத்து கிராம அலுவலர் பிரிவுகளையு உள்ளடக்கும் வகையில் முன்னெடுக்கப்படும் ‘அத்தம’ தேசிய தூய்மை வேலைத்திட்டத்தின் இரண்டாம் கட்ட நிகழ்வானது இன்று (19.09.2026) நாடளாவிய ரீதியில் ஆரம்பிக்கப்பட்டது.“ஒன்றாக இணைவோம் – சுத்தமான இலங்கையை கட்டியெழுப்புவோம்” என்ற தொனிப்பொருளின் கீழ், நாட்டின் அனைத்து கிராம அலுவலர் பிரிவுகளையும் உள்ளடக்கும் வகையில் முன்னெடுக்கப்படும் ‘அத்தம’ தேசிய தூய்மை வேலைத்திட்டத்தின் இரண்டாம் கட்ட நிகழ்வானது இன்று (19.09.2026) நாடளாவிய ரீதியில் ஆரம்பிக்கப்பட்டது.
Clean Sri Lanka வேலைத்திட்டத்தின் கீழ் முன்னெடுக்கப்படும் இத்திட்டத்தின் கிளிநொச்சி மாவட்டத்திற்கான பிரதான நிகழ்வு, கரைச்சி பிரதேச செயலாளர் பிரிவிற்குட்பட்ட ஆனைவிழுந்தான்குளம் கிராம அலுவலர் பிரிவில் நடைபெற்றது.
கரைச்சி பிரதேச செயலாளர் திரு. தவச்செல்வம் முகுந்தன் அவர்களின் தலைமையில் நடைபெற்ற நிகழ்வில், Clean Sri Lanka செயலணியின் கிளிநொச்சி மாவட்ட இணைப்பாளர் திரு. மருங்கன் மோகன், 551ஆவது படைப்பிரிவின் கட்டளைத்தளபதி பிரிகேட் கொமாண்டர் H.M.M.P கேரத் மற்றும் கிளிநொச்சி மாவட்ட பிரதித் திட்டமிடல் பணிப்பாளர் திருமதி மாலதி ரமேஸ் ஆகியோர் கலந்து கொண்டு தேசிய தூய்மை வேலைத்திட்டத்தை உத்தியோகபூர்வமாக ஆரம்பித்து வைத்தனர்.
இந்நிகழ்வில் கரைச்சி பிரதேசசெயலக உதவிப் பிரதேசசெயலாளர், 11ஆவது கஜபாகு படையணியின் கட்டளை அதிகாரி மேஜர் வீரகோன், Clean Sri Lanka பிரதேச இணைப்பாளரும் பிரதேச சபை உறுப்பினருமான திரு. கே.சஜீவன், கிளி/ ஆனைவிழுந்தான்குளம் அ.த.க பாடசாலை அதிபர் திருமதி கனகலிக்கம் குமுதினி மற்றும் ஆசிரியர்கள், அக்கராயன்குளம் பொலிஸ் நிலையப் பொறுப்பதிகாரி, அரச உத்தியோகத்தர்கள், பொலிஸ், இராணுவம், சமூகமட்ட அமைப்புக்களின் உறுப்பினர்கள், பிரதேச மக்கள் மற்றும் மாணவர்கள் உள்ளிட்ட பலரும் கலந்து கொண்டனர்.
இந்த தேசிய வேலைத்திட்டத்தின் ஊடாக, கிளி/ ஆனைவிழுந்தான்குளம் அ.த.க பாடசாலை மைதானம் மற்றும் உள்ளக வளாகம் ஆகியன இராணுவத்தினர் இணைந்து பொதுமக்களின் பங்களிப்புடன் தூய்மைப்படுத்தப்பட்டதுடன் கிராம மட்டத்தில் “சுத்தமான இலங்கை” என்ற இலக்கை அடைவதற்கு அனைவரும் ஒன்றிணைந்து செயற்படுவதன் முக்கியத்துவம் வலியுறுத்தப்பட்டது.























