இலங்கை சமூகப் பாதுகாப்புச் சபையின் தேசிய விருது வழங்கும் நிகழ்வு – 2026 (வவுனியா)
கிராமிய அபிவிருத்தி, சமூகப் பாதுகாப்பு மற்றும் சமூக வலுவூட்டல் அமைச்சின் ஏற்பாட்டில், இலங்கை சமூகப் பாதுகாப்புச் சபையுடன் இணைந்து சமூகப் பாதுகாப்புக்கான தேசிய விருது விழா 30.09.2026 அன்று (புதன்) வவுனியாவில் இடம்பெற்றது.
நிகழ்வின் பிரதம விருந்தினராக கடற்றொழில், நீரியல் மற்றும் கடல் வளங்கள் அமைச்சர் கௌரவ இராமலிங்கம் சந்திரசேகர் அவர்களும், சிறப்பு அதிதியாக வடக்கு மாகாண ஆளுநர் கௌரவ நாகலிங்கம் வேதநாயகன் அவர்களும், கௌரவ அதிதியாக கூட்டுறவு அபிவிருத்தி அமைச்சின் பிரதி அமைச்சர் கௌரவ உபாலி சமரசிங்க அவர்களும் கலந்துகொண்டனர்.
2025 ஆம் ஆண்டுக்கான சமூகப் பாதுகாப்பு ஓய்வூதியத் திட்ட அடைவுமட்டத்தில், மாவட்ட மட்ட இலக்கினை எட்டியமைக்கான தேசிய விருது, கிளிநொச்சி மாவட்டம் பெற்றுக்கொண்டது, இதன்போது மேலதிக அரசாங்க அதிபர் திருமதி. நளாயினி இன்பராஜ் அவர்களுக்கு மேற்படி விருது வழங்கி கௌரவிக்கப்பட்டது. அத்துடன், பணச் சேகரிப்பின் அடிப்படையில் தேசிய விருதினை எமது கரைச்சி பிரதேச செயலகம் பெற்றுக்கொண்டது, இவ் விருதினை எமது உதவிப்பிரதேச செயலாளர் திரு.கெங்காதரன் தஜீவன் பெற்றுக்கொண்டார். மேலும் பச்சிலைப்பள்ளி மற்றும் பூநகரி பிரதேச செயலகங்களின் பிரதேச செயலங்களும் மேற்படி அடைவுமட்டத்தை எட்டியிருந்தன.
தனிநபர் ரீதியிலான பணச் சேகரிப்பில், எமது கரைச்சி பிரதேச செயலகப் பிரிவைச் சேர்ந்த திருமதி. சு. கிருஸ்ணபிரியா (சமூக மேம்பாட்டு உத்தியோகத்தர்), உத்தியோகத்தர் தேசிய விருதுகள் வழங்கி கௌரவிக்கப்பட்டார்.
 
830857316 1535877611889377 5392210500989880995 n
 
830598619 2062773934406558 1234010388449265262 n 1
 
829868774 1775909077016357 7447784158813092596 n

News & Events

19
ඔක්2026
உள்ளக அலுவல்கள் அலகு (Internal Affairs Unit)  அலுவலகம் உத்தியோக பூர்வமாக திறந்து வைக்கப்பட்டது

உள்ளக அலுவல்கள் அலகு (Internal Affairs Unit)  அலுவலகம் உத்தியோக பூர்வமாக திறந்து வைக்கப்பட்டது

கரைச்சி பிரதேச செயலகத்தில் உள்ளக அலுவல்கள் அலகு (Internal...

13
ඔක්2026
கரைச்சி பிரதேச செயலகத்தின் உள்ளக அலுவல்கள் பிரிவு (IAU)  ஸ்தாபிக்கப்பட்டுள்ளது.

கரைச்சி பிரதேச செயலகத்தின் உள்ளக அலுவல்கள் பிரிவு (IAU) ஸ்தாபிக்கப்பட்டுள்ளது.

கரைச்சி பிரதேச செயலகத்தின் உள்ளக அலுவல்கள் பிரிவு (IAU)...

Scroll To Top