Service Cluster of Divisional Secretariat
சிவில் பதிவுகள்
அனுமதி வழங்கல்
சான்றிதழ்கள் வழங்குதல்
ஓய்வூதிய கொடுப்பனவு
நில நிர்வாகம்
சமூக நலம் மற்றும் நன்மைகள்
சமுர்த்தி திட்டம்
கொள்முதல்கள்
அபிவிருத்தி திட்டம்
எம்மால் வழங்கப்படும் சேவைகளைக் கண்டறிய...
தேவைக்கேற்ப, தொடர்புடைய வகையைச் சரிபார்க்கவும். நீங்கள் தேடிய தகவலை உங்களால் கண்டுபிடிக்க முடியவில்லை என்றால், தயவு செய்து எங்களை தொடர்பு கொள்ளவும்.
தொடர்புகளுக்குஅரசு சேவை மையங்கள்
News & Events
கரைச்சி பிரதேச செயலகத்தில் உள்ளக அலுவல்கள் அலகு (Internal Affairs Unit) அலுவலகம் உத்தியோக பூர்வமாக திறந்து வைக்கப்பட்டது.கரைச்சி பிரதேச செயலகத்தில் உள்ளக அலுவல்கள் அலகு (Internal Affairs Unit) அலுவலகம் உத்தியோக பூர்வமாக திறந்து வைக்கப்பட்டது.
கரைச்சி பிரதேச செயலகத்தில் உள்ளக அலுவல்கள் பிரிவானது (IAU) இன்று (2026/10/16) பிரதேச செயலாளர் அவர்களினால் உத்தியோகபூர்வமாக திறந்து வைக்கப்பட்டது.
அரச சேவையில் நேர்மை, வெளிப்படைத்தன்மை மற்றும் பொறுப்புக்கூறலை மேம்படுத்தி, ஊழலற்ற, வினைத்திறனான மற்றும் பொதுமக்களை மையமாகக் கொண்ட சேவையை உறுதிப்படுத்துவதனை நோக்காகக் கொண்டு இப்பிரிவானது திறந்துவைக்கப்பட்டுள்ளது.
இந்நிகழ்வில் உதவி பிரதேச செயலாளர் ( உள்ளக அலுவல்கள் பிரிவின் தலைவர்), நிர்வாக உத்தியோகத்தர் (நேர்மை அலுவலர்), உள்ளக அலுவல்கள் பிரிவின் அங்கத்தவர்கள் மற்றும் உத்தியோகத்தர்கள் ஆகியோருக்கான நியமனக் கடிதங்களும் பிரதேச செயலாளர் அவர்களினால் வழங்கிவைக்கப்பட்டது.
மேலும் உள்ளக அலுவல்கள் பிரிவுக்கான முறைப்பாடு வழங்கும் QR அடங்கிய சுவரொட்டியானது பிரதேச செயலாளரினால் பொதுமக்கள் பாவனைக்காக காட்சிப்படுத்தப்பட்டதுடன் கிராம அலுவலர் பிரிவுகள் மற்றும் சமுர்த்தி வங்கிகள் என்பவற்றில் காட்சிப்படுத்துவதற்கான சுவரொட்டிகளும் உரிய உத்தியோகத்தர்களிடம் கையளிக்கப்பட்டது.










கரைச்சி பிரதேச செயலகத்தின் உள்ளக அலுவல்கள் பிரிவு (IAU) தொடர்பான அறிவித்தல்கரைச்சி பிரதேச செயலகத்தின் உள்ளக அலுவல்கள் பிரிவு (IAU) தொடர்பான அறிவித்தல்
கரைச்சி பிரதேச செயலகத்தின் உள்ளக அலுவல்கள் பிரிவு (Internal Affairs Unit – IAU), அரச நிர்வாகத்தில் நேர்மை, வெளிப்படைத்தன்மை, பொறுப்புக்கூறல் மற்றும் நல்லாட்சியை மேம்படுத்துவதையும், ஊழல் மற்றும் முறைகேடுகளைத் தடுப்பதையும் நோக்கமாகக் கொண்டு ஸ்தாபிக்கப்பட்டுள்ளது.
அரச உத்தியோகத்தர்களின் கடமைகள் மற்றும் பொறுப்புகள் உரிய விதிமுறைகளுக்கு அமைவாக முன்னெடுக்கப்படுவதை ஊக்குவித்தல், பொதுமக்களின் முறைப்பாடுகளைப் பெற்றுக்கொள்வதற்கான அணுகலை இலகுபடுத்துதல், முறைப்பாடுகள் தொடர்பில் உரிய நடைமுறைகளின் கீழ் கவனம் செலுத்துதல் மற்றும் பொதுமக்களுக்கு தரமான, நியாயமான, வினைத்திறன்மிக்க சேவைகளை வழங்குவதை மேம்படுத்துதல் ஆகியன இப்பிரிவின் முக்கிய நோக்கங்களாகும்.
📲 உங்கள் முறைப்பாட்டை இலகுவாகப் பதிவு செய்யுங்கள்!
பொதுமக்கள் அரச சேவைகளைப் பெற்றுக்கொள்ளும் போது எதிர்கொள்ளும் சிக்கல்கள், ஊழல் மற்றும் முறைகேடுகள் தொடர்பான தகவல்கள் அல்லது ஏனைய உரிய முறைப்பாடுகளை உள்ளக அலுவல்கள் பிரிவுக்கு இலகுவாகத் தெரிவிப்பதற்காகப் பின்வரும் தொடர்பு வசதிகள் ஏற்படுத்தப்பட்டுள்ளன.
📞 தொலைபேசி இலக்கம்: 021 228 5880
📱 WhatsApp இலக்கம்: 070 668 5633
📧 மின்னஞ்சல் முகவரி: இந்த மின்-அஞ்சல் முகவரி spambots இடமிருந்து பாதுகாக்கப்படுகிறது. இதைப் பார்ப்பதற்குத் தாங்கள் JavaScript-ஐ இயலுமைப்படுத்த வேண்டும்.
🔳 QR குறியீடு மூலம் முறைப்பாடுகளைப் பதிவு செய்யுங்கள்.
இப்பதிவுடன் இணைக்கப்பட்டுள்ள QR குறியீட்டை உங்கள் கைத்தொலைபேசி மூலம் வருடுவதன் ஊடாக, இணையவழி முறைப்பாட்டுப் படிவத்தை அணுகி உங்கள் முறைப்பாட்டைப் பதிவு செய்யலாம்.
உள்ளக அலுவல்கள் பிரிவின் தொடர்பு விபரங்கள் மற்றும் QR குறியீடு அடங்கிய விழிப்புணர்வுச் சுவரொட்டிகள், கரைச்சி பிரதேச செயலகத்திற்குட்பட்ட அனைத்து கிராம அலுவலர் (GN) அலுவலகங்களிலும் மற்றும் சமுர்த்தி வங்கிகளிலும் காட்சிப்படுத்தப்படவுள்ளன.
இதன் மூலம் கிராம மட்டத்திலுள்ள பொதுமக்களும் தமது வீடுகளுக்கு அருகிலேயே இத்தகவல்களைப் பெற்றுக்கொண்டு, முறைப்பாட்டுப் பொறிமுறையை இலகுவாக அணுகுவதற்கான வாய்ப்பு ஏற்படுத்தப்படும்.
ஊழலற்ற, நேர்மையான மற்றும் பொறுப்பான அரச நிர்வாகத்தை உருவாக்குவது அரச உத்தியோகத்தர்களின் பொறுப்பு மட்டுமல்ல; பொதுமக்களின் ஒத்துழைப்பும் அதற்கு அவசியமானதாகும்.
அரச சேவைகளை மேலும் மேம்படுத்துவதற்கும், பொதுமக்களின் உரிமைகளைப் பாதுகாப்பதற்கும், முறைப்பாடுகள் மற்றும் தொடர்புடைய தகவல்களை உரிய வழிமுறைகள் ஊடாக உள்ளக அலுவல்கள் பிரிவுக்கு அறிவிக்குமாறு கேட்டுக்கொள்கின்றோம்.
நேர்மையான நிர்வாகம் | ஊழலற்ற பொதுச்சேவை | தரமான சேவை வழங்கல்







கரைச்சி பிரதேச செயலகத்தில் உள்ளக அலுவல்கள் பிரிவின் செயற்பாடுகள் மற்றும் ஊழல் தடுப்பு தொடர்பான விழிப்புணர்வு நிகழ்வு இடம்பெற்றது.கரைச்சி பிரதேச செயலகத்தில் உள்ளக அலுவல்கள் பிரிவின் செயற்பாடுகள் மற்றும் ஊழல் தடுப்பு தொடர்பான விழிப்புணர்வு நிகழ்வு இடம்பெற்றது.
கரைச்சி பிரதேச செயலக உத்தியோகத்தர்களுக்கான உள்ளக அலுவல்கள் பிரிவின் (Internal Affairs Unit – IAU) செயற்பாடுகள், முறைப்பாட்டு முறைகள் மற்றும் ஊழல் தடுப்பு தொடர்பான விழிப்புணர்வு நிகழ்வு 2026.10.02 அன்று கரைச்சி பிரதேச செயலகத்தின் பிரதான மண்டபத்தில் உதவி பிரதேச செயலாளர் (உள்ளக அலுவல்கள் பிரிவின் தலைவர்) தலைமையில் நடைபெற்றது.
இந்நிகழ்வில், அரச உத்தியோகத்தர்கள் தமது கடமைகளை நேர்மை, பொறுப்புணர்வு, வெளிப்படைத்தன்மை மற்றும் சட்ட விதிமுறைகளுக்கு அமைவாக நிறைவேற்ற வேண்டியதன் முக்கியத்துவம் தொடர்பாக விரிவாக விளக்கமளிக்கப்பட்டது. மேலும், உத்தியோகத்தர்கள் பொதுமக்களுடன் செயற்படும் போது பின்பற்ற வேண்டிய ஒழுக்கநெறிகள், ஊழல் மற்றும் முறைகேடுகளைத் தடுப்பதற்கான நடைமுறைகள் மற்றும் சந்தேகத்திற்கிடமான செயற்பாடுகள் தொடர்பில் மேற்கொள்ள வேண்டிய நடவடிக்கைகள் குறித்தும் விழிப்புணர்வு வழங்கப்பட்டது.
அத்துடன், எதிர்காலத்தில் உள்ளக அலுவல்கள் பிரிவினால் மேற்கொள்ளப்படவுள்ள கண்காணிப்பு, விழிப்புணர்வு, ஊழல் தடுப்பு நடவடிக்கைகள் தொடர்பாகவும் உத்தியோகத்தர்களுக்கு தெளிவுபடுத்தப்பட்டது.இந்நிகழ்வில் நிர்வாக உத்தியோகத்தர் (நேர்மை அலுவலர்) மற்றும் உள்ளக அலுவல்கள் பிரிவின் உறுப்பினர்கள் கலந்துகொண்டு கருத்துரைகள் மற்றும் வழிகாட்டல்களை வழங்கினர்.
பொதுமக்களுக்கு வழங்கப்படும் அரச சேவைகள் நேர்மையான, வெளிப்படையான, பொறுப்பான மற்றும் வினைத்திறன்மிக்கதாக அமைய வேண்டும் என்பதையும், ஊழல் மற்றும் முறைகேடுகளுக்கு இடமளிக்காத பணிச்சூழலை உருவாக்குவது ஒவ்வொரு அரச உத்தியோகத்தரினதும் பொறுப்பு என்பதையும் இந்நிகழ்வு வலியுறுத்தப்பட்டது.
“ஊழலற்ற நிர்வாகம் – தரமான பொதுச்சேவை” என்ற நோக்குடன், கரைச்சி பிரதேச செயலகத்தில் நேர்மை மற்றும் பொதுமக்களை மையப்படுத்திய சேவை வழங்கலை மேலும் வலுப்படுத்தும் வகையில் இவ்வாறான நடவடிக்கைகள் தொடர்ந்து முன்னெடுக்கப்படவுள்ளன.


























