IAU
Karachchi Divisional Secretariat
Iranaimadhu
Vakai
2026
kili tank
elephant Fence
Vannerikulam
Uruthirapuram

எம்மால் வழங்கப்படும் சேவைகளைக் கண்டறிய...

தேவைக்கேற்ப, தொடர்புடைய வகையைச் சரிபார்க்கவும். நீங்கள் தேடிய தகவலை உங்களால் கண்டுபிடிக்க முடியவில்லை என்றால், தயவு செய்து எங்களை தொடர்பு கொள்ளவும்.

தொடர்புகளுக்கு

கரைச்சி பிரதேச செயலகத்தில் உள்ளக அலுவல்கள் அலகு (Internal Affairs Unit)  அலுவலகம் உத்தியோக பூர்வமாக திறந்து வைக்கப்பட்டது.கரைச்சி பிரதேச செயலகத்தில் உள்ளக அலுவல்கள் அலகு (Internal Affairs Unit)  அலுவலகம் உத்தியோக பூர்வமாக திறந்து வைக்கப்பட்டது.
கரைச்சி பிரதேச செயலகத்தில் உள்ளக அலுவல்கள் பிரிவானது (IAU) இன்று (2026/10/16) பிரதேச செயலாளர் அவர்களினால் உத்தியோகபூர்வமாக  திறந்து வைக்கப்பட்டது. 
அரச சேவையில் நேர்மை, வெளிப்படைத்தன்மை மற்றும் பொறுப்புக்கூறலை மேம்படுத்தி, ஊழலற்ற, வினைத்திறனான மற்றும் பொதுமக்களை மையமாகக் கொண்ட சேவையை உறுதிப்படுத்துவதனை நோக்காகக் கொண்டு இப்பிரிவானது திறந்துவைக்கப்பட்டுள்ளது.
இந்நிகழ்வில் உதவி பிரதேச செயலாளர் ( உள்ளக அலுவல்கள் பிரிவின் தலைவர்),  நிர்வாக உத்தியோகத்தர் (நேர்மை அலுவலர்),  உள்ளக அலுவல்கள் பிரிவின் அங்கத்தவர்கள் மற்றும் உத்தியோகத்தர்கள் ஆகியோருக்கான நியமனக் கடிதங்களும் பிரதேச செயலாளர் அவர்களினால் வழங்கிவைக்கப்பட்டது.
மேலும் உள்ளக அலுவல்கள் பிரிவுக்கான முறைப்பாடு வழங்கும்  QR அடங்கிய சுவரொட்டியானது பிரதேச செயலாளரினால் பொதுமக்கள் பாவனைக்காக காட்சிப்படுத்தப்பட்டதுடன் கிராம அலுவலர் பிரிவுகள் மற்றும் சமுர்த்தி வங்கிகள் என்பவற்றில் காட்சிப்படுத்துவதற்கான சுவரொட்டிகளும் உரிய உத்தியோகத்தர்களிடம் கையளிக்கப்பட்டது.

WhatsApp Image 2026 10 16 at 14.51.44

WhatsApp Image 2026 10 16 at 14.51.45

WhatsApp Image 2026 10 16 at 14.51.46

WhatsApp Image 2026 10 16 at 14.51.46 1

WhatsApp Image 2026 10 16 at 14.51.47

WhatsApp Image 2026 10 16 at 14.51.47 1

WhatsApp Image 2026 10 16 at 14.51.47 2

WhatsApp Image 2026 10 16 at 14.51.48

WhatsApp Image 2026 10 16 at 14.51.49

WhatsApp Image 2026 10 16 at 14.51.48 1

கரைச்சி பிரதேச செயலகத்தின் உள்ளக அலுவல்கள் பிரிவு (IAU) தொடர்பான அறிவித்தல்கரைச்சி பிரதேச செயலகத்தின் உள்ளக அலுவல்கள் பிரிவு (IAU) தொடர்பான அறிவித்தல்
கரைச்சி பிரதேச செயலகத்தின் உள்ளக அலுவல்கள் பிரிவு (Internal Affairs Unit – IAU), அரச நிர்வாகத்தில் நேர்மை, வெளிப்படைத்தன்மை, பொறுப்புக்கூறல் மற்றும் நல்லாட்சியை மேம்படுத்துவதையும், ஊழல் மற்றும் முறைகேடுகளைத் தடுப்பதையும் நோக்கமாகக் கொண்டு ஸ்தாபிக்கப்பட்டுள்ளது.
அரச உத்தியோகத்தர்களின் கடமைகள் மற்றும் பொறுப்புகள் உரிய விதிமுறைகளுக்கு அமைவாக முன்னெடுக்கப்படுவதை ஊக்குவித்தல், பொதுமக்களின் முறைப்பாடுகளைப் பெற்றுக்கொள்வதற்கான அணுகலை இலகுபடுத்துதல், முறைப்பாடுகள் தொடர்பில் உரிய நடைமுறைகளின் கீழ் கவனம் செலுத்துதல் மற்றும் பொதுமக்களுக்கு தரமான, நியாயமான, வினைத்திறன்மிக்க சேவைகளை வழங்குவதை மேம்படுத்துதல் ஆகியன இப்பிரிவின் முக்கிய நோக்கங்களாகும்.
📲 உங்கள் முறைப்பாட்டை இலகுவாகப் பதிவு செய்யுங்கள்!
பொதுமக்கள் அரச சேவைகளைப் பெற்றுக்கொள்ளும் போது எதிர்கொள்ளும் சிக்கல்கள், ஊழல் மற்றும் முறைகேடுகள் தொடர்பான தகவல்கள் அல்லது ஏனைய உரிய முறைப்பாடுகளை உள்ளக அலுவல்கள் பிரிவுக்கு இலகுவாகத் தெரிவிப்பதற்காகப் பின்வரும் தொடர்பு வசதிகள் ஏற்படுத்தப்பட்டுள்ளன.
📞 தொலைபேசி இலக்கம்: 021 228 5880
📱 WhatsApp இலக்கம்: 070 668 5633
📧 மின்னஞ்சல் முகவரி: இந்த மின்-அஞ்சல் முகவரி spambots இடமிருந்து பாதுகாக்கப்படுகிறது. இதைப் பார்ப்பதற்குத் தாங்கள் JavaScript-ஐ இயலுமைப்படுத்த வேண்டும்.
🔳 QR குறியீடு மூலம் முறைப்பாடுகளைப் பதிவு செய்யுங்கள்.
இப்பதிவுடன் இணைக்கப்பட்டுள்ள QR குறியீட்டை உங்கள் கைத்தொலைபேசி மூலம் வருடுவதன் ஊடாக, இணையவழி முறைப்பாட்டுப் படிவத்தை அணுகி உங்கள் முறைப்பாட்டைப் பதிவு செய்யலாம்.
உள்ளக அலுவல்கள் பிரிவின் தொடர்பு விபரங்கள் மற்றும் QR குறியீடு அடங்கிய விழிப்புணர்வுச் சுவரொட்டிகள், கரைச்சி பிரதேச செயலகத்திற்குட்பட்ட அனைத்து கிராம அலுவலர் (GN) அலுவலகங்களிலும் மற்றும் சமுர்த்தி வங்கிகளிலும் காட்சிப்படுத்தப்படவுள்ளன.
இதன் மூலம் கிராம மட்டத்திலுள்ள பொதுமக்களும் தமது வீடுகளுக்கு அருகிலேயே இத்தகவல்களைப் பெற்றுக்கொண்டு, முறைப்பாட்டுப் பொறிமுறையை இலகுவாக அணுகுவதற்கான வாய்ப்பு ஏற்படுத்தப்படும்.
ஊழலற்ற, நேர்மையான மற்றும் பொறுப்பான அரச நிர்வாகத்தை உருவாக்குவது அரச உத்தியோகத்தர்களின் பொறுப்பு மட்டுமல்ல; பொதுமக்களின் ஒத்துழைப்பும் அதற்கு அவசியமானதாகும்.
அரச சேவைகளை மேலும் மேம்படுத்துவதற்கும், பொதுமக்களின் உரிமைகளைப் பாதுகாப்பதற்கும், முறைப்பாடுகள் மற்றும் தொடர்புடைய தகவல்களை உரிய வழிமுறைகள் ஊடாக உள்ளக அலுவல்கள் பிரிவுக்கு அறிவிக்குமாறு கேட்டுக்கொள்கின்றோம்.
நேர்மையான நிர்வாகம் | ஊழலற்ற பொதுச்சேவை | தரமான சேவை வழங்கல்

WhatsApp Image 2026 10 12 at 19.52.05

WhatsApp Image 2026 10 12 at 19.52.05 1

கிளிநொச்சி மாவட்டத்தில் பொருளாதாரத் தொகைமதிப்பு கணக்கெடுப்பு பணிகள் உத்தியோகபூர்வமாக ஆரம்பம்
​தொகைமதிப்பு புள்ளிவிவரத் திணைக்களத்தின் ஏற்பாட்டில், நாடு தழுவிய ரீதியில் மேற்கொள்ளப்பட்டு வரும் பொருளாதாரத் தொகைமதிப்பின் விவசாய நடவடிக்கைகளுக்கான கணக்கெடுப்புப் பணிகளின் கிளிநொச்சி மாவட்டத்திற்கான ஆரம்ப நிகழ்வு எமது பிரிவில் ௦2.10.2026 அன்று இடம்பெற்றது.
மாவட்ட புள்ளிவிபரவியாளர் திரு ஆர்.இராஜசூரி அவர்களின் தலைமையில் நடைபெற்ற இந்நிகழ்வில் மாவட்ட இணைப்பாளர் ஸ்ரீஹரன், மாவட்டச்செயலக பிரதம கணக்காளர்,கணக்காளர் ,கரைச்சி உதவி பிரதேச செயலாளர், நிர்வாக கிராம அலுவலர்,கிராம அலுவலர், பிரதேச புள்ளிவிபர உத்தியோகத்தர்கள் TAB தொழில்நுட்ப உத்தியோகத்தர்கள், கணக்கெடுப்பாளர்கள் மற்றும் விவசாயப் பிரதிநிதிகள் பலரும் கலந்து சிறப்பித்தனர்.
​
830966949 2160024844933058 4551493399584088041 n
 
828499272 1687922310006851 7461993290783401485 n
 
829226487 4680687812207014 3940644850301641709 n
 
830281527 1448091977221615 5100340819401281891 n
 
830966949 2160024844933058 4551493399584088041 n

கரைச்சி பிரதேச செயலகத்தில் உள்ளக அலுவல்கள் பிரிவின் செயற்பாடுகள் மற்றும் ஊழல் தடுப்பு தொடர்பான விழிப்புணர்வு நிகழ்வு இடம்பெற்றது.கரைச்சி பிரதேச செயலகத்தில் உள்ளக அலுவல்கள் பிரிவின் செயற்பாடுகள் மற்றும் ஊழல் தடுப்பு தொடர்பான விழிப்புணர்வு நிகழ்வு இடம்பெற்றது.

கரைச்சி பிரதேச செயலக உத்தியோகத்தர்களுக்கான உள்ளக அலுவல்கள் பிரிவின் (Internal Affairs Unit – IAU) செயற்பாடுகள், முறைப்பாட்டு முறைகள் மற்றும் ஊழல் தடுப்பு தொடர்பான விழிப்புணர்வு நிகழ்வு 2026.10.02 அன்று கரைச்சி பிரதேச செயலகத்தின் பிரதான மண்டபத்தில் உதவி பிரதேச செயலாளர் (உள்ளக அலுவல்கள் பிரிவின் தலைவர்) தலைமையில் நடைபெற்றது.
இந்நிகழ்வில், அரச உத்தியோகத்தர்கள் தமது கடமைகளை நேர்மை, பொறுப்புணர்வு, வெளிப்படைத்தன்மை மற்றும் சட்ட விதிமுறைகளுக்கு அமைவாக நிறைவேற்ற வேண்டியதன் முக்கியத்துவம் தொடர்பாக விரிவாக விளக்கமளிக்கப்பட்டது. மேலும், உத்தியோகத்தர்கள் பொதுமக்களுடன் செயற்படும் போது பின்பற்ற வேண்டிய ஒழுக்கநெறிகள், ஊழல் மற்றும் முறைகேடுகளைத் தடுப்பதற்கான நடைமுறைகள் மற்றும் சந்தேகத்திற்கிடமான செயற்பாடுகள் தொடர்பில் மேற்கொள்ள வேண்டிய நடவடிக்கைகள் குறித்தும் விழிப்புணர்வு வழங்கப்பட்டது.
அத்துடன், எதிர்காலத்தில் உள்ளக அலுவல்கள் பிரிவினால் மேற்கொள்ளப்படவுள்ள கண்காணிப்பு, விழிப்புணர்வு, ஊழல் தடுப்பு நடவடிக்கைகள் தொடர்பாகவும் உத்தியோகத்தர்களுக்கு தெளிவுபடுத்தப்பட்டது.இந்நிகழ்வில் நிர்வாக உத்தியோகத்தர் (நேர்மை அலுவலர்) மற்றும் உள்ளக அலுவல்கள் பிரிவின் உறுப்பினர்கள் கலந்துகொண்டு கருத்துரைகள் மற்றும் வழிகாட்டல்களை வழங்கினர்.
பொதுமக்களுக்கு வழங்கப்படும் அரச சேவைகள் நேர்மையான, வெளிப்படையான, பொறுப்பான மற்றும் வினைத்திறன்மிக்கதாக அமைய வேண்டும் என்பதையும், ஊழல் மற்றும் முறைகேடுகளுக்கு இடமளிக்காத பணிச்சூழலை உருவாக்குவது ஒவ்வொரு அரச உத்தியோகத்தரினதும் பொறுப்பு என்பதையும் இந்நிகழ்வு வலியுறுத்தப்பட்டது.
“ஊழலற்ற நிர்வாகம் – தரமான பொதுச்சேவை” என்ற நோக்குடன், கரைச்சி பிரதேச செயலகத்தில் நேர்மை மற்றும் பொதுமக்களை மையப்படுத்திய சேவை வழங்கலை மேலும் வலுப்படுத்தும் வகையில் இவ்வாறான நடவடிக்கைகள் தொடர்ந்து முன்னெடுக்கப்படவுள்ளன.

WhatsApp Image 2026 10 03 at 21.40.06 1

WhatsApp Image 2026 10 03 at 21.40.06 2

WhatsApp Image 2026 10 03 at 21.40.04

WhatsApp Image 2026 10 03 at 21.40.05 1

WhatsApp Image 2026 10 03 at 21.40.05 2

WhatsApp Image 2026 10 03 at 21.40.05

News & Events

19
அக்2026
உள்ளக அலுவல்கள் அலகு (Internal Affairs Unit)  அலுவலகம் உத்தியோக பூர்வமாக திறந்து வைக்கப்பட்டது

உள்ளக அலுவல்கள் அலகு (Internal Affairs Unit)  அலுவலகம் உத்தியோக பூர்வமாக திறந்து வைக்கப்பட்டது

கரைச்சி பிரதேச செயலகத்தில் உள்ளக அலுவல்கள் அலகு (Internal...

13
அக்2026
கரைச்சி பிரதேச செயலகத்தின் உள்ளக அலுவல்கள் பிரிவு (IAU)  ஸ்தாபிக்கப்பட்டுள்ளது.

கரைச்சி பிரதேச செயலகத்தின் உள்ளக அலுவல்கள் பிரிவு (IAU) ஸ்தாபிக்கப்பட்டுள்ளது.

கரைச்சி பிரதேச செயலகத்தின் உள்ளக அலுவல்கள் பிரிவு (IAU)...

07
அக்2026
பொருளாதாரத் தொகைமதிப்பு கணக்கெடுப்பு பணிகள் உத்தியோகபூர்வமாக ஆரம்பம் 02.10.2026

பொருளாதாரத் தொகைமதிப்பு கணக்கெடுப்பு பணிகள் உத்தியோகபூர்வமாக ஆரம்பம் 02.10.2026

கிளிநொச்சி மாவட்டத்தில் பொருளாதாரத் தொகைமதிப்பு கணக்கெடுப்பு பணிகள் உத்தியோகபூர்வமாக...

07
அக்2026
 ஊழல் தடுப்பு தொடர்பான விழிப்புணர்வு நிகழ்வு (Internal Affairs Unit – IAU)-Karachchi

ஊழல் தடுப்பு தொடர்பான விழிப்புணர்வு நிகழ்வு (Internal Affairs Unit – IAU)-Karachchi

கரைச்சி பிரதேச செயலகத்தில் உள்ளக அலுவல்கள் பிரிவின் செயற்பாடுகள்...

Scroll To Top