கரைச்சி பிரதேச செயலகத்தில் உள்ளக அலுவல்கள் அலகு (Internal Affairs Unit) அலுவலகம் உத்தியோக பூர்வமாக திறந்து வைக்கப்பட்டது.கரைச்சி பிரதேச செயலகத்தில் உள்ளக அலுவல்கள் அலகு (Internal Affairs Unit) அலுவலகம் உத்தியோக பூர்வமாக திறந்து வைக்கப்பட்டது.
கரைச்சி பிரதேச செயலகத்தில் உள்ளக அலுவல்கள் பிரிவானது (IAU) இன்று (2026/10/16) பிரதேச செயலாளர் அவர்களினால் உத்தியோகபூர்வமாக திறந்து வைக்கப்பட்டது.
அரச சேவையில் நேர்மை, வெளிப்படைத்தன்மை மற்றும் பொறுப்புக்கூறலை மேம்படுத்தி, ஊழலற்ற, வினைத்திறனான மற்றும் பொதுமக்களை மையமாகக் கொண்ட சேவையை உறுதிப்படுத்துவதனை நோக்காகக் கொண்டு இப்பிரிவானது திறந்துவைக்கப்பட்டுள்ளது.
இந்நிகழ்வில் உதவி பிரதேச செயலாளர் ( உள்ளக அலுவல்கள் பிரிவின் தலைவர்), நிர்வாக உத்தியோகத்தர் (நேர்மை அலுவலர்), உள்ளக அலுவல்கள் பிரிவின் அங்கத்தவர்கள் மற்றும் உத்தியோகத்தர்கள் ஆகியோருக்கான நியமனக் கடிதங்களும் பிரதேச செயலாளர் அவர்களினால் வழங்கிவைக்கப்பட்டது.
மேலும் உள்ளக அலுவல்கள் பிரிவுக்கான முறைப்பாடு வழங்கும் QR அடங்கிய சுவரொட்டியானது பிரதேச செயலாளரினால் பொதுமக்கள் பாவனைக்காக காட்சிப்படுத்தப்பட்டதுடன் கிராம அலுவலர் பிரிவுகள் மற்றும் சமுர்த்தி வங்கிகள் என்பவற்றில் காட்சிப்படுத்துவதற்கான சுவரொட்டிகளும் உரிய உத்தியோகத்தர்களிடம் கையளிக்கப்பட்டது.
























