கரைச்சி பிரதேச செயலகத்தில் உள்ளக அலுவல்கள் பிரிவின் செயற்பாடுகள் மற்றும் ஊழல் தடுப்பு தொடர்பான விழிப்புணர்வு நிகழ்வு இடம்பெற்றது.கரைச்சி பிரதேச செயலகத்தில் உள்ளக அலுவல்கள் பிரிவின் செயற்பாடுகள் மற்றும் ஊழல் தடுப்பு தொடர்பான விழிப்புணர்வு நிகழ்வு இடம்பெற்றது.

கரைச்சி பிரதேச செயலக உத்தியோகத்தர்களுக்கான உள்ளக அலுவல்கள் பிரிவின் (Internal Affairs Unit – IAU) செயற்பாடுகள், முறைப்பாட்டு முறைகள் மற்றும் ஊழல் தடுப்பு தொடர்பான விழிப்புணர்வு நிகழ்வு 2026.10.02 அன்று கரைச்சி பிரதேச செயலகத்தின் பிரதான மண்டபத்தில் உதவி பிரதேச செயலாளர் (உள்ளக அலுவல்கள் பிரிவின் தலைவர்) தலைமையில் நடைபெற்றது.
இந்நிகழ்வில், அரச உத்தியோகத்தர்கள் தமது கடமைகளை நேர்மை, பொறுப்புணர்வு, வெளிப்படைத்தன்மை மற்றும் சட்ட விதிமுறைகளுக்கு அமைவாக நிறைவேற்ற வேண்டியதன் முக்கியத்துவம் தொடர்பாக விரிவாக விளக்கமளிக்கப்பட்டது. மேலும், உத்தியோகத்தர்கள் பொதுமக்களுடன் செயற்படும் போது பின்பற்ற வேண்டிய ஒழுக்கநெறிகள், ஊழல் மற்றும் முறைகேடுகளைத் தடுப்பதற்கான நடைமுறைகள் மற்றும் சந்தேகத்திற்கிடமான செயற்பாடுகள் தொடர்பில் மேற்கொள்ள வேண்டிய நடவடிக்கைகள் குறித்தும் விழிப்புணர்வு வழங்கப்பட்டது.
அத்துடன், எதிர்காலத்தில் உள்ளக அலுவல்கள் பிரிவினால் மேற்கொள்ளப்படவுள்ள கண்காணிப்பு, விழிப்புணர்வு, ஊழல் தடுப்பு நடவடிக்கைகள் தொடர்பாகவும் உத்தியோகத்தர்களுக்கு தெளிவுபடுத்தப்பட்டது.இந்நிகழ்வில் நிர்வாக உத்தியோகத்தர் (நேர்மை அலுவலர்) மற்றும் உள்ளக அலுவல்கள் பிரிவின் உறுப்பினர்கள் கலந்துகொண்டு கருத்துரைகள் மற்றும் வழிகாட்டல்களை வழங்கினர்.
பொதுமக்களுக்கு வழங்கப்படும் அரச சேவைகள் நேர்மையான, வெளிப்படையான, பொறுப்பான மற்றும் வினைத்திறன்மிக்கதாக அமைய வேண்டும் என்பதையும், ஊழல் மற்றும் முறைகேடுகளுக்கு இடமளிக்காத பணிச்சூழலை உருவாக்குவது ஒவ்வொரு அரச உத்தியோகத்தரினதும் பொறுப்பு என்பதையும் இந்நிகழ்வு வலியுறுத்தப்பட்டது.
“ஊழலற்ற நிர்வாகம் – தரமான பொதுச்சேவை” என்ற நோக்குடன், கரைச்சி பிரதேச செயலகத்தில் நேர்மை மற்றும் பொதுமக்களை மையப்படுத்திய சேவை வழங்கலை மேலும் வலுப்படுத்தும் வகையில் இவ்வாறான நடவடிக்கைகள் தொடர்ந்து முன்னெடுக்கப்படவுள்ளன.

WhatsApp Image 2026 10 03 at 21.40.06 1

WhatsApp Image 2026 10 03 at 21.40.06 2

WhatsApp Image 2026 10 03 at 21.40.04

WhatsApp Image 2026 10 03 at 21.40.05 1

WhatsApp Image 2026 10 03 at 21.40.05 2

WhatsApp Image 2026 10 03 at 21.40.05

Scroll To Top