ප්රාදේශිය ලේකම් කාර්යාල සේවා ගොනු
සිවිල් ලියාපදිංචිය
අවසර පත්ර/ බලපත්ර නිකුත් කිරීම
සහතික පත්ර නිකුත් කිරීම
විශ්රාම වැටුප් ගෙවීම්
ඉඩම් පරිපාලනය
සමාජ සුභසාධන සහ සහන
සමෘද්ධි වැඩසටහන්
ප්රසම්පාදන
සංවර්ධන වැඩසටහන්
අප සපයන සේවාවන්...
ඔබේ අවශ්යතාව අනුව අදාළ කාණ්ඩය වෙත පිවිස පරීක්ෂා කර බලන්න. ඔබ සොයන තොරතුරු එහිදී සොයා ගැනීමට නොහැකි වූයේ නම්, අප ඇමතීමට කාරුණික වන්න.
අප අමතන්නරාජ්ය සේවා ස්ථාන
News & Events






தேசிய நேர்மை வாரம் – 2026 ஆரம்பநாள் நிகழ்வு கரைச்சி பிரதேச செயலகத்தில் நடைபெற்றது.
தேசிய நேர்மை வாரம் – 2026 ஆரம்பநாள் நிகழ்வு எமது பிரதேச செயலாளர் திரு.த.முகுந்தன் அவர்களின் தலைமையில் கரைச்சி பிரதேச செயலகத்தில் சிறப்பாக நடைபெற்றது
“நேர்மைக் கலாசாரம் – கிளீன் ஸ்ரீ லங்கா தேசிய நிகழ்ச்சித்திட்டம்” என்ற தொனிப்பொருளின் கீழ் தேசிய நேர்மை வாரம் – 2026 (2026 ஜூலை 27 முதல் 31 வரை) நாடளாவிய ரீதியில் நடைமுறைப்படுத்தப்பட்டு வருகிறது. இதன் ஒரு பகுதியாக “சட்டத்தை மதிக்கும் நேர்மையான அரச சேவை” எனும் கருப்பொருளை முன்னிறுத்திய ஆரம்பநாள் நிகழ்வு, 2026 ஜூலை 27ஆம் திகதி காலை 9.00 மணிக்கு கரைச்சி பிரதேச செயலகத்தில் சிறப்பாக நடைபெற்றது.
இந்நிகழ்வுகள் தேசியக் கொடியேற்றலுடன் ஆரம்பிக்கப்பட்டது, அதனைத் தொடர்ந்து, “தேசிய நேர்மை சத்தியப்பிரமாணம்” அனைத்து கரைச்சி பிரதேச செயலக அலுவலர்களாலும் வாசிக்கப்பட்டு, நேர்மையான மற்றும் பொறுப்புணர்வுள்ள அரச சேவையை வழங்கும் சத்தியப்பிரமாணம் மேற்கொள்ளப்பட்டது. இந்நிகழ்வில், மேற்பார்வை ஒன்று இல்லாத நேரத்திலும் சிறந்த கண்ணியமிக்க அரச சேவையை வழங்குதலை வலியுறுத்தி உதவி பிரதேச செயலாளர் நிகழ்வின் சிறப்புரை நிகழ்த்தினார்.
இத்தகைய நிகழ்வுகள், நேர்மைக் கலாசாரத்தை அரச சேவையில் மேலும் வலுப்படுத்துவதோடு, மக்களின் நம்பிக்கையைப் பேணும் பொறுப்புணர்வுமிக்க, சட்டத்தை மதிக்கும் மற்றும் மக்கள் மையப்படுத்தப்பட்ட அரச சேவையை உருவாக்குவதற்கான முக்கியமான முன்னெடுப்பாக அமைகின்றன.












கரைச்சி பிரதேச செயலகத்தினால் ஒழுங்குபடுத்தப்பட்ட இரத்ததான நிகழ்வு கடந்த 22.06.2026 அன்று கரைச்சி பிரதேச செயலகத்தில் நடைபெற்றது. இதில் ஏராளமான உத்தியோகத்தர்கள் தன்முனைப்புடன் இரத்ததானத்தினை வழங்கியிருந்தனர்.






வீடமைப்பு, நிர்மாணிப்பு மற்றும் நீர் வழங்கல் அமைச்சின் நிதி ஒதுக்கீட்டில் கரைச்சி பிரதேச செயலாளர் பிரிவில் அமுல்படுத்தப்பட்ட வீட்டுத்திட்டத்தின் கீழ் நிர்மாணிக்கப்பட்ட வீடுகள் 16.06.2026 அன்று பயனாளிகளிடம் கையளிக்கப்பட்டன.வீடமைப்பு, நிர்மாணிப்பு மற்றும் நீர் வழங்கல் அமைச்சின் நிதி ஒதுக்கீட்டில் கரைச்சி பிரதேச செயலாளர் பிரிவில் அமுல்படுத்தப்பட்ட வீட்டுத்திட்டத்தின் கீழ் நிர்மாணிக்கப்பட்ட வீடுகள் 16.06.2026 அன்று பயனாளிகளிடம் கையளிக்கப்பட்டன.
இந் நிகழ்வில் கௌரவ வீடமைப்பு நிர்மாணிப்பு மற்றும் நீர் வழங்கல் பிரதியமைச்சர் T. B. சரத் அவர்கள் பிரதம அதிதியாக கலந்து கொண்டு சம்பிரதாய பூர்வமாக பயனாளிகளிடம் வீட்டினை கையளித்தார். மேலும் கௌரவ பாராளுமன்ற உறுப்பினர் க. இளங்குமரன் ,கிளிநொச்சி மாவட்ட அரசாங்க அதிபர் சு. முரளிதரன், கரைச்சி பிரதேச செயலாளர் த.முகுந்தன் ஆகிய அரச அதிகாரிகள் மற்றும் பொதுமக்கள் என பலர் இந்நிகழ்வில் கலந்து கொண்டனர்.































